கோலாலம்பூர்:
பத்து கேவ்ஸ் பகுதியில் தனது மூன்று வயது மகனைத் துன்புறுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் பாட்டி, நேற்று (ஏப்ரல் 25) போலீசில் புகார் அளித்துள்ளார். புகார்தாரர் மற்றும் சந்தேக நபரான தாய் ஆகிய இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பக்கட்ட விசாரணையின்படி, இந்தச் சம்பவம் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இரவு 8 மணியளவில் நடந்துள்ளது.
தனது பேரன் அழுவதைக் கேட்ட பாட்டி, அக்குழந்தை தாயால் துன்புறுத்தப்படுவதாகச் சந்தேகித்துப் புகார் அளித்தார்.
அந்தச் சிறுவனின் பெற்ற தாய் உள்ளூர் பெண் என்றும், அவருக்குத் திருமணம் ஆகவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
சிறுவன் தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தையைத் துன்புறுத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று, கோம்பாக் மாவட்ட போலீஸ் துணை ஆணையர் நூர் அரிஃபின் முகமது நசீர் கூறினார்.
இந்த வழக்கு 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணைப் பிடிக்கப் போலீசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இது குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்