மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் உள்ள கெத்தேரே (Ketereh), கம்பங் சிமாவில் உள்ள ஒரு நெல் வயல் பகுதியில் 19 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவியின் உடல் 61 முறை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரக் கொலை சம்பவம் மலேசிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் கழுத்தில் 'SYAA' என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கழுத்துச் சங்கிலி இருந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த பயங்கரமான கொலை வழக்கு தொடர்பாக இரு முக்கிய சந்தேக நபர்களைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்துள்ளனர். இந்த குற்றவாளிகள் ஏன் அந்த இளம் பெண்ணை இவ்வளவு கொடூரமாகக் கொலை செய்தார்கள் என்பதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் இந்த அதிர்ச்சி செய்தியைக் கேட்டு பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திலிருந்து தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிளந்தான் மாநில காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.