Offline
Menu
சுற்றுலா கப்பலில் ஹான்டா வைரஸ் பரவல்: உலக சுகாதார நிறுவனம் அவசரநிலை அறிவிப்பு
By Administrator
Published on 05/10/2026 09:00
News

எம்வி ஹோண்டியஸ் (MV Hondius) என்ற சுற்றுலா கப்பலில் 'ஹான்டா வைரஸ்' (Hantavirus) வேகமாகப் பரவி வருவதால், உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. இதுவரை 7 பேருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அதில் இருவர் இந்தியர்கள் எனத் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் எலிகள் மூலம் பரவுவதைத் தாண்டி, மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவத் தொடங்கியுள்ளதா என்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்போது அந்தக் கப்பலில் உள்ள பயணிகள் அனைவரும் கடுமையான தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். முதல் தொற்று கண்டறியப்படுவதற்கு முன்பே கப்பலில் இருந்து இறங்கிய பயணிகளைத் தேடித் பிடித்துப் பரிசோதனை செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. சொகுசு பயணம் தற்போது ஒரு மருத்துவப் பேரிடராக மாறியுள்ளதால், கப்பலில் உள்ள பயணிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்த வைரஸ் பரவல் காரணமாகப் பல நாடுகள் அந்தக் கப்பலைத் தங்கள் நாட்டுத் துறைமுகங்களுக்குள் அனுமதிக்க மறுத்து வருகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவக் குழுவினர் கப்பலுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர். பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும், வைரஸின் தன்மையைக் கண்டறியும் வரை கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Comments