Offline
Menu
ஜாலான் அம்பாங் டவரில் இருந்து விழுந்தவரின் மரணம் குறித்து போலீசார் விசாரணை
By Administrator
Published on 05/11/2026 11:00
News

கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு கோபுரக் கட்டிடத்திலிருந்து ஒருவர் கீழே விழுந்த வழக்கு திடீர் மரண வழக்காக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

வாங்சா மாஜு காவல் நிலையத் தலைவர் அன்னாஸ் சுலைமான், எப்ஃஎம்டிக்கு அனுப்பிய ஒரு சுருக்கமான செய்தியில், இவ்விஷயம் குறித்து காவல்துறைக்கு ஒரு தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தார். சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பரவலாகப் பகிரப்பட்டுள்ளது. லுஹர் தொழுகைக்கான பாங்கு ஒலித்துக் கொண்டிருந்த வேளையில், மதியம் சுமார் 1 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக இணையவாசிகள் கூறுகின்றனர்.அந்த நபரின் அடையாளம் குறித்த எந்தத் தகவலும் உடனடியாகக் கிடைக்கவில்லை.

Comments