Offline
Menu
இந்துக் கோயில்கள் குறித்த கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால், அதனைத் திருத்திக்கொள்ளத் தயார்- பிரதமர் அன்வார்
By Administrator
Published on 05/11/2026 12:00
News

லேசியாவில் அனுமதியின்றி எழுப்பப்பட்ட இந்துக் கோயில்கள் குறித்து தாம் முன்னதாகத் தெரிவித்த கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால், அதனைத் திருத்திக்கொள்ளத் தயார் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

 

மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களுடனான சந்திப்பின்போது அவர் இதனை விளக்கினார். உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கோயில்கள் மீதுகடுமையான அமலாக்க நடவடிக்கைஎடுக்கப்படும் என்று அவர் கூறியிருந்தது, இந்தியச் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கையாகச் சிலரால் பார்க்கப்பட்டது. இது சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தமக்கு எந்த ஒரு தீய எண்ணமும் (Malice) இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

 

சட்டதிட்டங்களைக் கடைப்பிடிப்பதில் கண்டிப்புடன் இருக்கும் அதேவேளையில், பிற சமயத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதும் முக்கியம் என்று அவர் கூறினார். “அடுத்தவர்களின் உணர்ச்சிகளைக் காயப்படுத்தும் அளவுக்கு நாம் நடந்து கொள்ளக் கூடாதுஎன்று அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் பதவியில் தாம் எதிர்கொள்ளும் மிகச் சிக்கலான மற்றும் உணர்ச்சிகரமான பிரச்சினைகளில் இதுவும் ஒன்று என்று அவர் ஒப்புக்கொண்டார்.

மலேசியாவில் மலாய் இனத்தவர் பெரும்பான்மையாக இருந்தாலும், ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட எனது கருத்தை மாற்றிக்கொள்ள நான் தயார். ஆனால், ஒருபோதும் தவறான எண்ணத்துடன் நான் அதனைச் சொல்லவில்லை,” என்று அன்வார் கூறினார்.

Comments