Offline
Menu

LATEST NEWS

முதலமைச்சர் விஜய்யை சுற்றி இருக்கப்போகிறவர்கள் இவர்கள் தான்
By Administrator
Published on 05/11/2026 13:00
News

சென்னை: தவெக தலைவர் விஜய் இன்று தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து முதலமைச்சரின் அலுவலக பணிகளைத் தடையின்றி மேற்கொள்வதற்காக, பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் 14 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை முதலமைச்சர் அலுவலகத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

முதல்வர் விஜய்யுடன் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே..செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அதனை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் விஜய் சென்றார். அங்கு முதல்வருக்கான இருக்கையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு அலுவல்களை தொடங்கினார். நாளை சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா நியமிக்கப்பட்ட நிலையில், ஆளுநர் முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டார். புதிய அரசு அமைந்துள்ள நிலையில் நிர்வாகரீதியாக மாற்றங்கள் எடுக்கப்படும். அந்தவகையில் தற்போது முதலமைச்சர் விஜய்யின் முதன்மை செயலாளராக செந்தில்குமார் ..எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை செயலராக இருந்த லட்சுமி பிரியா விஜய்யின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து அதிகாரிகள் மாற்றம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments