Offline
Menu
த.வெ.க.வில் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் இணைந்த பார்த்திபன்
By Administrator
Published on 05/16/2026 08:00
News

சென்னை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியமைத்து உள்ளது. முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்று உள்ளார்.

இந்நிலையில், தேனி பெரியகுளம் தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க. எம்.பி.யும், அ.தி.மு.க. அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளருமான பார்த்திபன் த.வெ.க.வில் இணைந்துள்ளார். தமிழக அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் பார்த்திபன், த.வெ.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.

Comments