கோலாலம்பூர்:
சுங்கை பூலோ பகுதியில் காணாமல் போன 15 வயதுடைய இரண்டு சிறுமிகளைக் கண்டறிய காவல்துறை பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது.
வெவ்வேறு தேதிகளில் காணாமல் போன இரு சிறுமிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுங்கை பூலோ மாவட்ட காவல்துறைத் தலைவர் (OCPD) சுப்பிரிண்டெண்டன் முகமட் ஹபீஸ் முகமட் நோர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன சிறுமிகளில், நூர் அமானி தமியா ரோஸ்லான் (Nur Amani Damia Roslan), வயது: 15, 150 செமீ உயரம், 60 கிலோ எடையுள்ளவர் என்றும், கடைசியாகக் கண்டபோது: அடர் நிற சட்டை மற்றும் கால்சட்டை அணிந்திருந்தார், இவர் கடந்த மார்ச் 17 முதல் வீட்டிற்குத் திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை மே 13 அன்று புகார் அளித்துள்ளார்.
மற்றையவர் ஏஞ்சல் ஹோ கா சுவென் (Angel Ho Kha Suen), வயது: 15, 152 செமீ உயரம், 49 கிலோ எடையுடையவர் என்றும், கடைசியாகக் கண்டபோது லோகோ பொறிக்கப்பட்ட கருப்பு நிற டி-ஷர்ட் மற்றும் அடர் நீல நிற நீளமான கால்சட்டை அணிந்திருந்தார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 10) முதல் காணாமல் போயுள்ளார். இது குறித்து இன்று அதிகாலை 12.44 மணியளவில் அவரது தாயார் புகார் அளித்துள்ளார் என்றும் கூறினார்.
இந்த சிறுமிகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தையோ அல்லது இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரி சர்ஜன் முகமட் ராய்ஸ் அஸ்மி (016-9495707) என்பவரையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்