Offline
Menu
பணமில்லாததால் 21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டுப் பெண்ணின் உடல்!
By Administrator
Published on 06/10/2026 09:00
News

கோலாலம்பூர்:

மருத்துவக் கட்டணம் செலுத்த முடியாததால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவரின் உடல் ஜோகூர் மருத்துவமனை பிணவறையில் 21 நாட்கள் வைக்கப்பட்டிருந்த துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

2025 அக்டோபரில் கணவருடன் மலேசியா வந்த அவர், உடல்நலக்குறைவால் கடந்த மே 18 அன்று உயிரிழந்த நிலையில், அவரது கணவர் வீடின்றி சாலையோரம் தங்கும் அவலம் ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த சவப்பெட்டி சேவையாளர் மகேந்திரன் மற்றும் ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரவீன் குமார் ஆகியோரின் தலையீட்டிற்குப் பின், அசல் மருத்துவக் கட்டணமான RM8,547 என்பது RM4,000 ஆகக் குறைக்கப்பட்டது.

இத்தொகையை ரவீன் குமார் மற்றும் சுல்தானா ரொஹாயா அறக்கட்டளைத் தலைவர் சுகுமாரன் ஆகியோர் தலா RM2,000 வழங்கி செலுத்தியதைத் தொடர்ந்து, இன்று இந்து முறைப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது.

எனவே தான் இந்த சம்பவத்தை தொடர்ந்து, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் முறையான ஆவணங்கள் மற்றும் மருத்துவப் பாதுகாப்பு இன்றி மலேசியா வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று ரவீன் குமாரின் சிறப்பு அதிகாரி சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

Comments