Offline
Menu

LATEST NEWS

அமெரிக்காவோ, நானோ இல்லை என்றால் இஸ்ரேல் இல்லை: டிரம்ப் பேட்டி
By Administrator
Published on 06/18/2026 08:00
News

இவியான் பிரான்ஸ் நாட்டில் இவியான் நகரில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இவியான் நகருக்கு சென்று சேர்ந்துள்ளார். இதேபோன்று உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கத்தார் நாட்டின் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமது அல்-தானி ஆகியோரும் இவியான் நகருக்கு வந்துள்ளனர். அவர்கள் இருவரும் முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினர்.

மிக சிறிய போர்

இதன்பின்னர் டிரம்ப் அளித்த பேட்டியின்போது, ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டதுபற்றி குறிப்பிட்டார். அறிவிக்கப்பட்ட ஈரானுடனான ஒப்பந்தம், வெற்றியடைய வேண்டும் என்றார்.

இந்த பேட்டியின்போது, ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு முன்னர், லெபனானின் பெய்ரூட் நகரில் 2 மணிநேரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை தான் விரும்பவில்லை என்று டிரம்ப் குறிப்பிட்டார். எனினும், லெபனான் மோதலை மிக சிறிய போர் என குறிப்பிட்ட அவர், ஈரானுக்கு எதிரான போர் பெரியது என்றார்.

கத்தார் மன்னர்

தொடர்ந்து அவர், அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இல்லை. நான் இல்லை என்றால் இஸ்ரேல் இல்லை. ஏனெனில் நான் செய்த விசயங்களை துணிச்சலாக செய்ய கூடிய வேறு ஜனாதிபதி இல்லை என்றார். நெதன்யாகுவுடனான உறவு சிறந்த முறையில் உள்ளது. ஆனால், லெபனான் விவகாரத்தில் அதிக பொறுப்புடன் அவர் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதேபோன்று கத்தார் மன்னர் கூறும்போது, மத்திய கிழக்கில் முக்கிய தருணத்தில் உங்களுடைய தலைமைக்காக நான் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். எங்களிடம் நண்பர்கள் உதவி கேட்டால், நாங்கள் உதவி செய்யவே எப்போதும் தயாராக இருக்கிறோம் என்றார்.

Comments