Offline
Menu

LATEST NEWS

ஆப்பிளின் அடுத்த அதிரடி… ஐபோன் 18 சீரிஸில் என்னென்ன புதிய அம்சங்கள்?
By Administrator
Published on 07/01/2026 08:00
News

உலகின் முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனமாக ஆப்பிள் ஐபோன் உள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் தனது புதிய மாடல் சீரிஸ்களை வெளியிடுவது வழக்கம். முந்தைய மாடல் போன்களை விட புதிய மாடல் ஐபோன்களில் அசத்தலான அப்டேட்கள் இடம் பெறும் என்பதால்,ஆப்பிளின் புதிய அப்டேட்களுக்கு அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவும்.

9 ஜிபி ரேம், ஏ20 பிராசஸ்

அந்த வகையில், ஆப்பிள் ஐபோன் 18 மற்றும் 18 e அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைக்கு வருகிறது. இந்த மாடல் ஐபோன்களில் இரண்டு முக்கிய அப்டேட்கள் இடம் பெற உள்ளன. ஐபோன்களில் தற்போது உள்ள 8GB RAM-க்கு பதிலாக ஐபோன் 18, 18e-ல் 9GB RAM கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, போனின் செயல்திறன் மற்றும் வேகத்தை அதிகரிக்கும் விதமாக A20 PROCESSOR CHIP-ஐ நிறுவனம் அப்டேட்டாக கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

கேமராவில் அப்டேட்

ஐபோன் 18 ப்ரோவில் கேமராவில் மிகப்பெரிய அப்டேட்கள் வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஐபோன் 18 ப்ரோவின் பிரைமரி கேமராவில் மாறுபடும் அபர்ச்சர் வசதி இடம்பெறலாம். இதன் மூலம் லென்ஸுக்குள் நுழையும் ஒளியின் அளவை பயனர்கள் கைமுறையாக கட்டுப்படுத்த முடியும்.

இதனால் அதிக வெளிச்சத்தால் படம் மங்குவது குறைவதுடன், பின்னணி மங்கல் மற்றும் புகைப்படத்தின் தோற்றத்தை விருப்பத்துக்கு ஏற்ப கட்டுப்படுத்த முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வு செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடைபெறும் எனத்தெரிகிறது. அப்போது இந்த மாடல் போன்கள் பற்றிய முழு விவரங்களையும் ஆப்பிள் வெளியிடும்

Comments