Offline
Menu
நா மக்கல்லில் கவியரசு கண்ணதா சன் நூற்றா ண்டு விருது பெ ற்றார் டத்தோ ஸ்ரீ சரவணன்
By Administrator
Published on 07/07/2026 10:00
News

மலேசியாவில் கவியரசு கண்ணதாசனின் இலக்கியப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், கண்ணதாசன் அறக்கட்டளையின் மூலம் ஆண்டுதோறும் கண்ணதாசன் விழாவை தொடர்ந்து நடத்தி வரும் Datuk Seri M. Saravanan, தமிழ்நாட்டின் நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, “கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழா விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விழாவில் விருதைப் பெற்றுக்கொண்ட அவர், கவியரசு கண்ணதாசனின் இலக்கியப் பங்களிப்பு, தமிழ் மொழியின் பெருமை மற்றும் உலகத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் குறித்து சிறப்புரையாற்றியதுடன், விருதுக்கான ஏற்புரையையும் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் பேராசிரியர் முனைவர் அரசு பரமேஸ்வரன், பசுமை சத்தியமூர்த்தி, மருத்துவர் குழந்தைவேலு, காந்தி கண்ணதாசன், பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் வி.பி. குமார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Comments