Offline
Menu
ஜோகூர் மாநில ஆட்சிக்குழு இன்று அறிவிப்பு; அரண்மனையில் குவிந்த ஊடகங்கள்!
By Administrator
Published on 07/19/2026 12:40
News

ஜோகூர் மாநிலத்தின் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகவுள்ள நிலையில், ஜோகூர் அரண்மனை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வை செய்தியாக பதிவு செய்ய, மாநிலம் முழுவதிலிருந்தும் ஊடகங்கள் திரண்டுள்ளன. செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் என அனைவரும் நிகழ்வை நேரடியாக பதிவு செய்யத் தயாராக உள்ளனர்.

புதிய ஆட்சிக்குழுவில் யார் இடம்பெறுகின்றனர், யாருக்கு எந்தத் துறை ஒதுக்கப்படுகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் அதிகரித்துள்ளது.

இன்று நடைபெறும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகு, புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கான துறைப் பொறுப்புகள் வெளியிடப்படும்.

Comments