உலகளவில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் காரணமாக சாலை விபத்து உயிரிழப்புகள் 21% குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளே அதிகளவில் விபத்துகளில் பாதிக்கப்படுவதால் கடுமையான பாதுகாப்பு விதிகளை அமல்படுத்த ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.