Offline
Menu
சபாவில் மாயமான 11 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுப்பு: கொலையாளிகள் 2 பேர் கைது!
By Administrator
Published on 07/22/2026 19:00
News

சபா, செபாங்கார் பகுதியில் கடந்த சில நாட்களாக மாயமாகியிருந்த நுர்ஜிலியா அப்துல்லா (11) என்ற சிறுமி, கட்டுமானப் பணி நடைபெறும் வீட்டின் அருகே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சிறுமியின் தலையில் பலத்த காயங்கள் ஏற்படுத்தப்பட்டு அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 39 மற்றும் 42 வயதுடைய இருவரைப் போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments