Offline
Menu
பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்
By Administrator
Published on 08/07/2026 14:00
News

மெட்டா நிறுவனர் மன்னிப்பு கோரியதாக தகவல்

‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந் திரபிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் போராட் டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மாணவர்கள் போராட்டம் குறித்து பிரதமர் மோடி கடந்த மாதம் 23-ந்தேதி முதல் முறையாக நேரடி உரையாக ஒரு வீடியோ பதிவு செய்து சமூக வலைத்ளங்களில் வெளியிட்டார்.அந்த வீடியோவில் “வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். கடுமையான சட்ட விதிகள் மத்திய மந்திரி சபையின் முன் கொண்டு வரப்படும்” என்று கூறியிருந்தார்.

ஆனால் இந்த வீடியோ பேஸ்புக் சமூக ஊடக பதிவை நேற்று முன்தினம் அதிகாலை அதன் தாய் அமைப்பான மெட்டா நிறுவனம் நீக்கி பின்னர் 5 மணி நேரம் கழித்து மீண்டும் சேர்த்தது. இதனை தொடர்ந்து மத் திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டாவின் உலகளாவிய விவகாரங்கள் தலைவர் ஜோயல் கப்லான், இன்ஸ்டா கிராமின் தலைவர் ஆடம் மொசேரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. இதற்கு விளக்கம் அளித்த மெட்டா நிறுவனம் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கோரியதோடு, பிரதமர் மோடியின் பேஸ்புக் பதிவு தவறுதலாக அகற்றப்பட்டது என்றும், அது பின்னர் அந்த தளத்தில் மீண்டும் சேர்க்கப் பட்டதாகவும் விளக்கம் அளித்தது.

Comments