Offline
Menu
பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு 79-வது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட தலைவர்கள்!
By Administrator
Published on 08/11/2026 15:00
News

நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அவரது 79-வது பிறந்தநாளை முன்னிட்டு, தலைமைச் செயலாளர் (KSN) டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, நாட்டின் நல்வாழ்வுக்காகவும் சீர்திருத்தச் செயல்பாடுகளுக்காகவும் அரசுத்துறை தொடர்ந்து உறுதுணையாக நிற்கும் என அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரதமர் அலுவலகம் மற்றும் ‘மலேசிய மடானி’ அகப்பக்கங்கள் மூலமாகவும் பிறந்தநாள் வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.

Comments