ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 14 — ஜோகூர் பாருவில் உள்ள சுல்தான் அமினா மருத்துவமனை (HSA)-யில் O மற்றும் AB இரத்த வகைகளின் கையிருப்பு குறைந்து வருவதால், இந்த இரத்த வகைகளைக் கொண்ட தன்னார்வலர்கள் முன்வந்து இரத்த தானம் செய்யுமாறு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் இரத்தமாற்று மருத்துவத் துறை தனது Facebook பதிவில், இரத்த தானம் செய்ய விரும்புவோர் ஜோகூர் பாரு இரத்த தான முகாம் அட்டவணை பக்கத்தைப் பார்வையிட்டு, தங்களுக்கு அருகிலுள்ள இரத்த தான முகாம்களின் இடங்களை அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், ஜோகூர் இரத்த தான மையம், Mid Valley Southkey பகுதியில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை இரத்த தான முகாம் நடைபெறுகிறது.
AEON Mall Bukit Indah-ல் இன்று, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இரத்த தானம் செய்யலாம்.
அதேபோல், HSA இரத்த தான மையத்தில் இன்று மற்றும் நாளை காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை இரத்த தானம் நடைபெறுகிறது.
O அல்லது AB இரத்த வகை கொண்டவர்கள் — உங்கள் ஒரு துளி இரத்தம், ஒருவரின் உயிரைக் காப்பாற்றக்கூடும். முடிந்தால் இந்த வார இறுதியில் முன்வந்து இரத்த தானம் செய்யுங்கள். ❤️