Offline
Menu
கிள்ளானில் தங்க நகை கடையில் கொள்ளையடிக்கும் முயற்சி தோல்வி: நால்வர் தப்பியோட்டம்!
By Administrator
Published on 08/21/2026 15:00
News

கிள்ளான், ஜாலான் தெங்கு கெலானா பகுதியில் உள்ள நகை கடையில் கொள்ளையடிக்கும் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நான்கு கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர்.

காலை 11 மணியளவில் கடைக்குள் நுழைந்த மூன்று சந்தேக நபர்களில் இருவர் இரும்புச் சுத்தியலால் காட்சிப் பெட்டியின் கண்ணாடியை உடைக்க முயன்றதோடு, மற்றொருவர் கைத்துப்பாக்கியை வைத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

கண்ணாடியை உடைக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து, வெளியே காத்திருந்த மற்றொரு கூட்டாளியுடன் சேர்ந்து அவர்கள் இரு மோட்டார் சைக்கிள்களில் தப்பியோடினர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காகப் பல இடங்களில் ‘Op Tutup’ நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Comments