Offline
Menu
காஸானா நெகராவின் Xeraya Capital நிறுவனத்தில் முறைகேடு புகார்கள்: தீவிர விசாரணைக்கு பிரதமர் உத்தரவு!
By Administrator
Published on 08/22/2026 15:00
News

காஸானா நெகராவின் துணை நிறுவனமான Xeraya Capital நிறுவனத்தில் நிதி முறைகேடுகள் ஏதேனும் உள்ளதா என்பதை முழுமையாக ஆராயுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

கிள்ளானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், கடந்த 2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் செயல்பாடுகள், கடந்த காலப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்கப்படும் என்றார்.

மேலும், ஃபெல்டா நிர்வாகத்தின் கீழ் உள்ள ஹோட்டல் விற்பனை விவகாரம் போன்ற முந்தைய பிரச்சினைகள் எவ்வகையிலும் சமரசம் செய்யப்பட மாட்டாது என்றும், அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் முறைகேடுகளைக் கண்டுபிடிப்பதற்கான இந்த உறுதியான நடவடிக்கைகள் மக்களின் நலனைக் காக்க அவசியமானது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments