மாண்புமிகு டத்தோஸ்ரீ அவர்களுக்கு,
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் என்மீது சுமத்தியிருக்கும் அடிப்படையும், ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்தக் கடிதத்தை மிகுந்த மரியாதையுடன் தங்களுக்கு எழுதுகிறேன்.
மனிதவள அமைச்சராகப் பதவி வகித்த காலகட்டத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கும் எந்தவொரு விவகாரத்திலும் நான் நேரடியாகவோ அல்லது என் குடும்பத்தினர் மூலமாகவோ ஈடுபட்டதில்லை என்பதை தங்களுக்கு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.13 ஏப்ரல் 2022 தேதியிட்ட அமைச்சரவைக் கூட்டக் குறிப்புகள், வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிப்பதற்கான அதிகாரம் மனித வள அமைச்சருக்கு இல்லை என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.அதே கூட்டக் குறிப்புகளின்படி, பல்வேறு அமைச்சுகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட சிறப்பு ஓரிட முகப்பு (Pusat sehenti Khas) அமைக்கப்படும் என்றும், அந்த அமைப்பே இனி வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கும் நடைமுறைகளைத் துரிதப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கும் நடைமுறைகளைப் பொறுத்தவரை நான் கீழ்க்காணும் 3 அம்சங்களின் அடிப்படையில் அமைச்சராகச் செயல் நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
1. வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பற்றாக்குறையால் நாடு பில்லியன் கணக்கான ரிங்கிட்
2. தொழில் துறைகளின் பிரதிநிதிகள் தொடர்ந்து விடுத்து வந்த கோரிக்கைகள், அடிப்படையிலான நடவடிக்கைகள் (இணைப்பு ‘B’)
வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கும் நடைமுறைகளைத் துரிதமாக்கும் அமைச்சரவை உத்தரவுகள் விடுத்ததால், மனித வள அமைச்சின் தலைமைச் செ மனித வள இலாகாவின் தலைமை இயக்குநரும் வாரந்தோறும் நடைபெறும் அ கூட்டங்களில் தங்களின் அறிக்கைகளை ஒவ்வொரு வாரமும் சமர்ப்பிக்க வேண் அமைச்சரவை உத்தரவிட்டது.
மாண்புமிகு டத்தோஸ்ரீ அவர்களே!
மனிதவள அமைச்சராக நான் பதவி வகித்த காலகட்டத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான எல்லா விண்ணப்பங்களும் பிரத்தியேகமாக, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட மத்திய அமைப்பின் (Foreign Work Centralised Management System -FWCMS) கீழ் மட்டுமே பரிசீலிக்கப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளத் திட்டமிடும் எந்த நிறுவனமும் மேற்குறிப்பிட்ட வெளிநாட்டுத் மத்திய அமைப்பின் மூலமாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்பதும் அதன்பின்னர் அந்த அமைப்பு தகுதியான விண்ணப்பதாரர்களை தானியங்கி நடைமுறை (ஆட்டோமேடிக்) மூலம் இயல்பாகவே தேர்வு செய்து அவர்களை நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கும் நடைமுறையும் பின்பற்றப்பட்டது.
அந்த அமைப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் பின்னர் மனித வள அமைச்சின் கீழ் உள்ள ஓரிட முகப்பு மையத்திற்கு சமர்ப்பிக்கப்படும். எனவே, மனித வள அமைச்சர் என்ற முறையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்க விண்ணப்பிக்கும் குறிப்பிட்ட நிறுவனங்கள் குறித்து எனக்கு முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வாய்ப்போ, அல்லது இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்குப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களோடு தொடர்பு கொள்ளும் வாய்ப்போ எனக்கு ஏற்படவில்லை.
இங்கே நான் வலியுறுத்தும் முக்கிய கொள்கை அமுலாக்கம் என்னவென்றால், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட மத்திய அமைப்பின் கீழ் ஒரு நிறுவனத்தைப் பரிசீலித்து தேர்வு செய்யப்பட்டதாக உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அந்நிறுவனம் அடுத்த கட்டமாக மனித வள அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் நேர்காணல்களில் கலந்து கொள்ள முடியும். அவ்வாறு தேர்வு செய்யப்படாவிட்டால் நேர்காணல்களில் கலந்து கொள்ள முடியாது.
இந்த வழக்கு விவகாரத்தின் முக்கியத் தகவல் குறிப்புகள் (Specific Case Facts) இரண்டு வணிகர்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கும் நடைமுறையின் கீழ் எழுந்த புகார்களின் காரணமாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் பின்வருமாறு;
சைட் அமிருல்; இவர் வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கும் C லைசன்ஸ் (License C – foreign worker recruitment license) அங்கீகார அனுமதியைக் கொண்டிருக்கவில்லை. கைது நடவடிக்கையின்போது இவர் நல்ல உடல் நலத்தோடு இருந்தார்.
சிவா கணேசன்: இவரிடம் வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிப்பதற்கான C லைசன்ஸ் (License C – foreign worker recruitment license) இருந்தது. ஆனால் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அவர் நீரிழிவு நோய்க்காக டையாலிசிஸ் என்னும் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சையைத் தீவிரமாக மேற்கொண்டு வரவேண்டியிருந்தது.
மேற்குறிப்பிட்ட இரு வணிகர்களுக்கும் நெருக்குதலும், அழுத்தமும் தரப்பட்டு, அவர்களிடமிருந்து அவர்கள் சுயமாக, சொந்த விருப்பத்தின்பேரில் வழங்காத வாக்குமூலங்கள் அவர்களிடமிருந்து பெறப்பட்டன. அந்த வாக்குமூலங்களில் அதிகாரத்திலுள்ள சிலரின் விருப்பங்களுக்கு ஏற்ப எனது பெயரும் தீய நோக்கத்தோடு அந்த வாக்குமூலங்களில் சம்பந்தப்படுத்தப்பட்டன.
எனது பெயரையும் சம்பந்தப்படுத்தும் மிரட்டல்களுக்கு சைட் அமிருல் அடிபணிந்ததால் நான்கு நாட்கள் விசாரணைக்குப் பிறகு, அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் அவ்வாறு வாக்குமூலம் தந்ததற்கான முக்கியக் காரணம் அவரின் மனைவியையும் கைது செய்யப்போவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மிரட்டியதுதான் (இத்துடன் இணைப்பு C (Appendix C) என்னும் தலைப்பில் இணைக்கப்பட்டுள்ள சைட் அமிருல், அவரின் மனைவி ஆகியோரின் சத்தியப் பிரமாண ஆவணங்களைப் பார்க்கவும்)
சிவா கணேசன் என்பவரோ, தடுப்புக் காவலின்போது டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்பட்ட நிலையிலும் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டார். அதற்கான ஒரே காரணம் அவர் எனது பெயரைச் சம்பந்தப்படுத்தி வாக்குமூலம் தர ஒப்புக் கொள்ளவில்லை என்பதால்தான். (இந்த வழக்கு நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டால் இந்த விவரங்களை வழக்கு விசாரணையின்போது வெளியிட அவர் தயாராக இருக்கின்றார்)
10 ஆயிரம் ரிங்கிட்டுக்கான ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்ட சைட் அமிருல் மற்றும் அவரின் மனைவி இருவரும் தாங்கள் வழங்கிய அவதூறு வாக்குமூலங்களைத் திருத்தவும் மீட்டுக் கொள்ளவும் முன்வந்தனர். எனினும் அவ்வாற்று செய்வதிலிருந்து ஊழன தடுப்பு ஆணைய அதிகாரிகள் அவர்களைத் தடுத்து விட்டனர்.
தங்களின் வழக்கறிஞர் ஆலோசனைப்படி சைட் அமிருலும் அவரின் மனைவியும் கடந்த 22 செப்டம்பர் 2022-ஆம் நாள் சத்தியப் பிரமாண அதிகாரி முன்னிலையில் மற்றொரு சத்தியப் பிரமாணப் பதிவை மேற்கொண்டனர்.ஊழல் தடுப்பு ஆணையத்திற்கும் அதிகாம்பூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்ட அந்தப் பதிவின் பிரதி தங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது. சத்தியப் பிரமாணப் பதிவுகளின் மூலம் தங்களின் வாக்குமூலங்களை அவர்கள் இருவரும் மீட்டுக் கொண்டு, தெளிவான வழக்கங்கள் வழங்கிய காரணத்தால் அவர்களுக்கான பிணைத் தொகையை கடந்த 26 ஜூன் 2023-ஆம் நாள் ஊழல் தடுப்பு ஆணையம் அவர்களிடம் திரும்ப ஒப்படைத்தது என்பதோடு, அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வருவதாகவும் என்மீது மேற்கொண்டு விசாரணைகள் இல்லை என்றும் ஊழல் தடுப்பு ஆணையம் உறுதி செய்தது (இணைப்பு D-Appendix D பார்க்கவும்).
மாண்புமிகு பிரதமர் டத்தோஸ்ரீ அவர்களே!
எதிர்பாராத விதமாக கடந்த நவம்பர் 2025-இல், மேற்குறிப்பிட்ட விவகாரங்கள் நடந்து முடிந்து நான்காண்டுகள் கடந்த நிலையில் சைட் அமிருலும் அவரின் மனைவியும் மீண்டு இதே விவகாரத்திற்காக விசாரணைக்காக ஊழல் தடுப்பு ஆணையத்தால் அழைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தை மீண்டும் எதிர்கொள்ள அவர்கள் உறுதியான நிலைப்பாடு எடுத்து 202 இல் தாங்கள் வழங்கிய சத்தியப் பிரமாண வாக்குமூலத்தை மறுஉறுதிப்படும் மற்றொரு சத்தியப் பிரமாணப் பதிவைச் செய்தனர் (இணைப்பு E – Appendix E பார்க்கவும்).
மாண்புமிகு பிரதமர் டத்தோஸ்ரீ அவர்களே!
நவம்பர் 2025 தொடங்கி கடந்த மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் நான் தங்களுடன் பிரதமர் என்ற முறையில் இந்த விவகாரம் குறித்து பல முறை கலந்துரையாடியிருக்கிறேன். அப்போதெல்லாம், என்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற உறுதிமொழியைத் தாங்கள் வழங்கினீர்கள். இருப்பினும் ஊழல் தடுப்பு ஆணையம் திடீரென என்மீது விசாரணைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவது குறித்து நான் மிகுந்த ஏமாற்றமும் அதிருப்தியும் கொண்டிருக்கிறேன்.
இந்த வழக்கு முழுமையாக அடிப்படையற்றது, ஆதாரமற்றது என்பதால் இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளின் நேர்மையையும் பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த வழக்கு விசாரணைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் மாண்புமிகு டத்தோஸ்ரீ அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
இந்த வழக்கு விவகாரத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
1. இந்த வழக்கு தொடர்பாக என்னைச் சம்பந்தப்படுத்தும் ரொக்கப் பணமோ அல்லது முக்கிய ஆதாரங்களோ இதுவரை கைப்பற்றப்படவில்லை.
2. இந்த விவகாரம் தொடர்பில் நான் எந்த ஓர் அரசாங்க அதிகாரிக்கும் எத்தகைய உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பதோடு வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் அதிகாரம் என் வரம்பு எல்லைக்குள் இருக்கவில்லை.
யாருடனும் நான் தொடர்பில் இருந்தது கிடையாது என்பதையும் உறுதிப்படுத்துகிC
இந்த நடவடிக்கைகள் என்மீதும் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள நியாயமற்ற குற்றச்சாட்டுகள் என்பதையும் ஓர் அரசாங்க இலாகாவின் தீய நோக்கங்களோடு மேற்கொள்ளப்பட்டவை என்பதையும் நாட்டின் அரசாங்கத் தலைவர் என்ற முறையில் மாண்புமிகு டத்தோஸ்ரீ அவர்கள் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன். இந்த விவகாரம் தொடர்பில் தாங்கள் காட்டும் அக்கறைக்கும் கவனத்துக்கும் மதிப்பு கொடுத்து நன்றி தெரிவிப்பதோடு, இந்த விவகாரம் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.
நன்றி.
டத்தோ ஶ்ரீ எம்.சரவணன்