Offline
Menu
புத்ராஜெயா அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்ததாக நம்பப்படும் 15 வயது சிறுமி உயிரிழப்பு
By Administrator
Published on 09/14/2026 14:00
News

புத்ராஜெயா, பிரெசன்ட்  5இல்  உள்ள அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில், நேற்று இரவு அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்ததாகக் நம்பப்படும் சம்பவத்தில் 15 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

 

அச்சிறுமி, அப்பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது தளத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த ‘எஸ்.எம்.கே. புத்ராஜெயா பிரெசன்ட் 11’ பள்ளியின் மாணவி என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக புத்ராஜெயா காவல் துறைத் தலைவர் ஐடி ஷாம் முகமது தெரிவித்தார்.

 

சம்பவ இடத்திற்கு வந்த புத்ராஜெயா மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தியதாக கோஸ்மோ செய்தி வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் தற்போதுதிடீர் மரணம்என வகைப்படுத்தப்பட்டுள்ளது; மரணத்திற்கான காரணத்தை உறுதி செய்வதற்காக பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

Comments