Offline
Menu
1.58 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை
By Administrator
Published on 09/21/2026 12:00
News
பிரதமர் மோடி பெருமிதம்

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் 1.58 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 

மேற்கு வங்காளத்தில் பாஜக அரசின் அன்னபூர்ணா திட்டத்தின் கீழ், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு 1.58 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.3,000 மாதாந்திர உதவித்தொகை செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை தற்போது 1.58 கோடியாக அதிகரித்துள்ளது. இது தொடர்பான பயனாளிகளுக்கு உதவித்தொகையை விடுவிக்கும் நிகழ்ச்சி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

 

அப்போது அவர் பேசுகையில்,

மேற்கு வங்காளபெண்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தையும் முன்னேறும் துணிவையும் அளிப்பதே தங்களது தொலைநோக்குப் பார்வை என்று குறிப்பிட்டார். பெண்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதில் அன்னபூர்ணா திட்டம் முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்த அவர், தகுதியுள்ள பெண்கள் யாரும் இத்திட்டத்திலிருந்து விடுபடமாட்டார்கள்என்று உறுதி அளித்தார்.

 

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மேற்கு வங்க முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி, பிரதமரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி இனி மேற்கு வங்காளத்தில் அன்னபூர்ணா தினமாகக் கொண்டாடப்படும் என்றார். மேலும், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் மாநிலத்தில் தயாரிக்கப்பட உள்ள 50 லட்சம் பயனாளிகள் பட்டியலின் கீழ் உள்ள அனைவரும் பெண்களாக இருப்பார்கள் என்றும் அவர் அறிவித்தார்.

Comments