Offline
Menu
இந்தியாவுக்கு வெளியே முதன்முறையாக தமிழில் சத்குருவின் மஹாசத்சங்கம்
By Administrator
Published on 10/02/2026 18:00
News
அக்டோபர் 8-இல் மலேசியாவில் நடைபெற உள்ளது

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் மஹாசத்சங்கம் வரும் அக்டோபர் 8-ஆம் தேதி மலேசியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பத்து மலை வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்தியாவுக்கு வெளியே முழுமையாகத் தமிழில் சத்குருவின் மஹாசத்சங்கம் நடைபெறுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.சத்குருவின் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த மஹாசத்சங்க நிகழ்வு, அவரது கருத்துகளையும் ஆன்மீக வழிகாட்டுதலையும் நேரடித் தமிழில் கேட்டுத் தெரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையவுள்ளது.

 

அக். 8-ஆம் தேதி மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் அனைவரும் இலவசமாகக் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் sadhguru.co/tamil-satsang என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.ஆசிய-பசிபிக் பகுதியில் வாழும் தமிழ் மக்கள் சத்குருவுடன் இணைந்து, யோக அறிவியலின் மூலம் வாழ்க்கையின் ஆழமான பரிமாணங்களை உணர்ந்துகொள்ள இந்த நிகழ்வு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

 

மேலும், மலேசிய வருகையின் போது சத்குரு “Soak in the Ecstasy of Enlightenment” எனும் ஒரு நாள் அனுபவப்பூர்வமான சிறப்பு நிகழ்ச்சியை அக்டோபர் 11-ஆம் தேதி வழிநடத்தவுள்ளார்.மன அழுத்தத்தைக் குறைத்து, மனத் தெளிவையும் புத்துணர்ச்சியையும் தரும் ‘ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா’ பயிற்சியை முடித்தவர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும்.சத்குருவின் வழிகாட்டுதலில் தியானம் மற்றும் யோகா மூலம் ஆன்மீகத்தின் அடுத்த நிலையை உணர்ந்து கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பாகும்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களின் வசதிக்காகத் தமிழ், மாண்டரின், இந்தோனேசிய, மலாய், வியட்நாமிய, கொரிய மற்றும் ஜப்பானிய மொழிகளில் நேரலை மொழிபெயர்ப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு sadhguru.co/malaysia என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

 

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக, சத்குரு தனிமனித நலன் மற்றும் உள்நிலை மாற்றத்திற்கான யோகக் கருவிகளை வழங்கி, யோக அறிவியலை உலகெங்கிலும் உள்ள மக்களுக்குக் கொண்டு சேர்த்துள்ளார். அத்துடன் விழிப்புணர்வு, கொள்கை மாற்றத்திற்கான முன்னெடுப்புகள் மற்றும் களப் பணிகள் மூலம் உலகளாவிய மண் வளச் சீரழிவைத் தடுக்கும் ‘மண் காப்போம்’ போன்ற சர்வதேச இயக்கங்களையும் அவர் முன்னெடுத்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Comments