Offline
Menu
16 வயது மாணவி ஐரின் சோஃபியா மர்ம மரணம்
By Administrator
Published on 10/04/2026 18:00
News
பேத்தி உடலைக் கண்டு அலறிய பாட்டி

பத்து பஹாட் யோங் பெங் பகுதியில் அமைந்துள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியின் மண்டபத்தில் 16 வயது படிவம் 4 மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஐரின் சோஃபியா எனும் அம்மாணவி, இன்று பிற்பகல் பள்ளி மண்டபத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

 

“பிற்பகல் வேளையில் சிறப்பு வகுப்பிற்குச் சென்ற மாணவி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பாட்டி, பள்ளிக்கு விரைந்து சென்று பார்த்தபோது பேத்தி பலத்த காயங்களுடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மீட்டெடுக்கும் போது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அம்மாணவி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.” என்று கூறப்படுகிறது.

 

அந்த மாணவியின் தாய் காலமான நிலையில், பத்து பஹாட்டில் உள்ள பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த அம்மாணவியின் உடலில் காயங்களும், காய்ந்த ரத்தக் கறைகளும் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் மாணவியின் தந்தை கோலாலம்பூரில் பணியாற்றி வருகிறார்.

 

இச்சம்பவம் குறித்துத் தொடர்புகொண்டு கேட்டபோது, வழக்கு தொடர்பாகத் தீவிர விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பத்து பஹாட் மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் ஷஹ்ருலனுவார் முஷாத்தாத் அப்துல்லா சானி உறுதிப்படுத்தியுள்ளார்.

Comments