Offline
Menu
கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள் மோதிய விபத்தில்
By Administrator
Published on 10/06/2026 16:00
News
குழந்தை உட்பட நால்வர் பலி

ஈப்போ: கிளந்தானில்  இருந்து கெரிக் நோக்கிச் செல்லும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் இன்று 3 வாகனங்கள் மோதிய விபத்தில், ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். கெரிக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ரைஸ் மஹ்மூத், மதியம் 12.56 மணிக்கு ஒரு லாரி மற்றும் இரண்டு கார்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார்.

 

இந்த விபத்தில் இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு பெண் குழந்தை உயிரிழந்ததாகவும், ஒரு சிறுவன் காயமடைந்ததாகவும் அவர் கூறினார். அவர்கள் அனைவரும் பெரோடுவா ஆக்சியா காரில் இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும் இருவர் காரில் சிக்கி கொண்டிருந்தனர்  என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். மேலும், மீட்புப் பணி மதியம் 2.38 மணிக்கு முடிவடைந்ததாகவும் அவர் கூறினார்.

Comments