Offline
Menu
PTPTN கல்விக்கடன் நிலுவைத் தொகை RM10.7 பில்லியனாக உயர்வு
By Administrator
Published on 10/07/2026 16:00
News
11.6 லட்சம் கடனாளிகள் கட்டாமல் இழுத்தடிப்பு

தேசிய உயர்கல்விக் கழகத்தின் (PTPTN) கீழ் உயர்கல்விக் கடன் பெற்ற 11.6 லட்சம் (1.16 மில்லியன்) கடனாளிகள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை கடந்த ஆகஸ்ட் 31 நிலவரப்படி RM10.7 பில்லியனை எட்டியுள்ளது.

 

இன்று நாடாளுமன்றத்தில் ஜெலெபு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த உயர்கல்வி அமைச்சு, இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

 

“PTPTN நிதி மாதிரியின் நீண்டகால ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, கடன்களை நிர்வகித்தல் மற்றும் கடன் வசூலிப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தகுதியான தேவையின் அடிப்படையில் நிதியுதவி சீரமைக்கப்படும்” என்று மலேசிய உயர்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடன் வசூலின் செயல்திறனை அதிகரிக்கும் பொருட்டுச் அரசு நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களுடன் இணைந்து கூட்டு நடவடிக்கைகளும், சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படும் என அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

 

அதேவேளையில், உண்மையில் நிதி நெருக்கடியில் தவிக்கும் கடன் வாங்கிகளைக் கருத்தில் கொண்டு, அவர்கள் முன்வந்து தங்களின் பொருளாதாரச் சூழ்நிலைக்கு ஏற்பக் கடனை மறுசீரமைப்பு செய்யவும் அல்லது கடன் திருப்பிச் செலுத்துதலை ஒத்திவைக்கப் விண்ணப்பிக்கவும் PTPTN வாய்ப்பளிக்கிறது.

Comments