Offline
Menu
மலேசியாவின் 6 மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மூடல்
By Administrator
Published on 10/09/2026 21:00
News
அமைச்சர் ஃபட்லினா சிடெக் அறிவிப்பு!

மலேசியாவில் காற்றின் தரம் தொடர்ச்சியாக மோசமடைந்து வரும் நிலையில், ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் ஆகிய மாநிலங்கள், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா உள்ளிட்ட கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் பகாங் மாநிலத்தின் ரொம்பின் மாவட்டம் ஆகியவற்றில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்படுவதாக கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபட்லினா சிடெக் அறிவித்துள்ளார்.

 

மேலும் பெர்லிஸ், பேராக், பினாங்கு, சபா, சரவாக் மற்றும் லபுவான் ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, ‘வீட்டிலிருந்தபடியே கற்றல் மற்றும் கற்பித்தல்’ (PdPR) முறையைச் செயல்படுத்துமாறு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

பள்ளிகள் மூடப்பட்டுள்ள காலத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் (AKP) வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

பள்ளிகள் மூடப்படுவதால் பெற்றோருக்கு ஏற்படும் சிரமங்களை உணர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இனிவரும் நாட்களில் பெற்றோர் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய போதிய கால அவகாசம் அளிக்கும் வகையில் மூடல்கள் குறித்த அறிவிப்புகள் முன்னதாகவே வெளியிடப்படும் என்றார்.

Comments