துடெல்லி,டெல்லி போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கானோர் கைது
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி புதுடெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெறவிருந்த போராட்டத்தில் மக்கள் பங்கேற்பதைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 7,000 பேர் தடுத்து வைக்கப்பட்டனர். பலர் தாக்கப்பட்டு காயமடைந்தனர்.
தடுத்து வைக்கப்பட்ட போராட்டக்காரர்களுக்கு தண்ணீர் மறுக்கப்பட்டதாகவும், அவர்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் விடுவிக்கப்பட்டதாகவும், பலரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைதியான முறையில்
தடுத்து வைக்கப்பட்டவர்களில் இந்திய மாநிலங்களின் நான்கு முன்னாள் முதல்-மந்திரிகள், மாணவர்கள், இளைஞர் தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் அடங்குவர்.
இந்நிலையில் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமை மதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு, இந்தியாவிடம் ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு செய்தித் தொடர்பாளர் தமீன் அல்-கீதன் (Thameen Al-Kheetan) வலியுறுத்தி உள்ளார்.