Offline
Menu
பெர்கேசோவின் ‘Lindung 24 Jam’ திட்டம்
By Administrator
Published on 10/17/2026 16:00
News
மலேசியச் சமூகப் பாதுகாப்பில் புதிய மைல்கல்!

மலேசியத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு (பெர்கேசோ) வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, மனிதவள அமைச்சு, சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இணைந்து ‘Lindung 24 Jam’ (பணி சாரா விபத்துத் திட்டம்) எனும் விரிவான புதிய திட்டம் மலேசியச் சமூகப் பாதுகாப்பில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. வேலை நேரம் முடிந்த பிறகும், வார இறுதி விடுமுறை நாட்களிலும் நாட்டின் எல்லைக்குள் தொழிலாளர்களுக்கு 24 மணி நேரமும் முழுமையான விபத்துப்

 

பாதுகாப்பை உறுதிசெய்வதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

பணியாளர் சமூகப் பாதுகாப்பு சட்டம் 1969 (சட்டம் 4)-இன் கீழ் இதுவரை நடைமுறையில் இருந்துவரும் ‘வேலைவிபத்துகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டம்’, பணி நேரத்திலும் வேலைக்குச் சென்று வரும் வழியிலும் ஏற்படும் விபத்துகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கி வந்தது.ஆனால், பெரும்பாலான தொழிலாளர்கள் பணி நேரத்திற்குப் பின்னரே விபத்துகளில் சிக்குகின்றனர் என்பதை உணர்ந்து இப்புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.வீடு, உடற்பயிற்சி, ஓய்வுநேரப் பொழுதுபோக்குகள் அல்லது தனிப்பட்ட பயணங்களின்போது எதிர்பாராமல் விபத்துகள் நேரிட்டாலும், தொழிலாளர்கள் முறையான மருத்துவச் சிகிச்சையையும் நிதிப் பாதுகாப்பையும் பெறுவதை ‘Lindung 24 Jam’ சாத்தியமாக்கியுள்ளது.எனினும், வழக்கமான அல்லது நாள்பட்ட நோய்கள், வெளிநாடுகளில் நிகழும் விபத்துகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Comments