Offline
Menu
“பிக் பாஸ்” சீசன்10: விஜய் சேதுபதிக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் மாற்றம்
By Administrator
Published on 10/26/2026 15:00
Entertainment

‘பிக்பாஸ்’ சீசன் 10 நிகழ்ச்சியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் மாற்றப்பட்டுள்ளார்.

 

‘பிக்பாஸ்’ சீசன் 10
தமிழ் தாண்டி பல்வேறு மொழிகளிலும் ‘பிக்பாஸ்’ என்ற ‘ரியாலிட்டி ஷோ’ நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 7-வது சீசனுடன் கமல்ஹாசன் விலகியநிலையில், 8 மற்றும் 9-வது சீசனை முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இப்போது 10வது சீசன் கடந்த செப்டம்பர் 6 அன்று துவங்கியது.

 

‘பிக்பாஸ்’ சீசன் 10 நிகழ்ச்சி 6-ஆவது வாரத்தை நிறைவு செய்யவுள்ளது. பொதுவாக நிகழ்ச்சியின் கடைசி சில நாள்களில் மட்டும் கடினமான போட்டிகள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த சீசனில் நாள்தோறும் கடினமான போட்டிகள் கொடுக்கப்படுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

தொகுப்பாளர் மாற்றம்


இந்த நிலையில், இந்த வாரத்தில் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருப்பதாக புரோமோ வீடியோ வெளியிட்டுள்ளனர்.

 

கடந்த 2 வாரங்களாகவே விஜய் சேதுபதிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினாலேயே இந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் வருகிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments