ஜோகூர் பாரு, தம்போய் பகுதியில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில் நேற்று (நவம்பர் 11) மாலை 5.00 மணியளவில் கடல்சார் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது 34 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசியத் தகவலின் அடிப்படையில் இரண்டாம் பிராந்திய கடல்சார் போலீஸ் தளபதி உதவி ஆணையர் நூர் அஸ்மான் ஜமால் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனையில், 12,074 பல்வேறு வகையான பீர் கேன்கள், 526 வெள்ளை வைன் போத்தல்கள், வரி முத்திரைகள் இல்லாத 896 அட்டைப்பெட்டிகள் (Cartons) பல்வேறு ரக சிகரெட்டுகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 670,571.94 மலேசிய ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் கடப்பிதழை பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே மலேசியாவை விட்டு வெளியேறிவிட்டதாக முத்திரையிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர், அவரது கடப்பிதழ் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக கூலாய் மாவட்ட பொலிஸ் தலைமையகத்தின் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 1967ஆம் ஆண்டின் சுங்கச் சட்டத்தின் 135(1)(d) பிரிவின் கீழும், 1959/63 குடிவரவு ஒழுங்குமுறைகளின் 39(b) பிரிவின் கீழும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு.