Offline
Menu
மலாக்கா தேர்தல் நாளன்று இடியுடன் கூடிய மழை!
By Administrator
Published on 11/13/2026 13:00
News
காலையிலேயே வாக்களிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்!

மலாக்கா, 

வரும் நவம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ள 16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தலின் வாக்குப்பதிவு நாளன்று, மாநிலத்தின் மூன்று மாவட்டங்களிலும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வாக்குப்பதிவு நாளன்று காலையில் மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும், பிற்பகலில் மூன்று மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர்கள் மழை தொடங்குவதற்கு முன்னதாகவே காலையில் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், வாக்காளர்கள் குடைகளை எடுத்துச் செல்லுமாறும், வாக்குச்சாவடிகளில் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், வாக்குச்சாவடிகளுக்குப் புறப்படுவதற்கு முன்னர் அண்மைய வானிலை முன்னறிவிப்புகளைச் சரிபார்த்து, அதற்கேற்ப பயணங்களைத் திட்டமிடுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments