Offline
4 வாகனங்களை உட்படுத்திய விபத்தில் காதலர்கள் பலி
Published on 07/28/2024 23:48
News

கோல திரெங்கானு:

இங்குள்ள ஜாலான் கெமாஜுவான் என்ற இடத்தில் இன்று அதிகாலை 4 வாகனங்கள் மோதிய விபத்தில், காதலர்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்தவர்கள் கோல திரெங்கானுவைச் சேர்ந்த முஹமட் ஹனிஃப் இதாம் முகமட் அஸ்மி, 24, மற்றும் நூர்ஷாபிரா இஸ்ஸானி சுல்கர்னைன், 22, என அடையாளம் காணப்பட்டனர் என்று, கோல திரெங்கானு மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அஸ்லி முகமட் நூர் கூறினார்.

இன்று அதிகாலை 3.11 மணியளவில் குறித்த காதலர்கள் பயணித்த பெரோடுவா மைவியின் பின்புறத்தில் நான்கு சக்கர வாகனம் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் கூறினார்.

காரை ஓட்டிச் சென்ற முஹமட் ஹனிஃப் இதாம், ஒட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்ததால், அது சறுக்கி, எதிர்ப்பாதையில் கவிழ்ந்து, கோங் பாடாக் திசையில் இருந்து வந்த SUV வாகனத்துடன் மோதியது, அதேநேரத்தில் SUV யின் பின்னால் சென்ற மற்றொரு வாகனமும் இந்த விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் SUV ஓட்டுநர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது என்றார்.

பாதிக்கப்பட்ட காதலர்கள் மீட்கப்பட்டு, சுல்தானா நூர் சாஹிரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவமனையும் மருத்துவக்குழு அறிவித்தது என்று அவர் மேலும் கூறினார்.

Comments