Offline
Menu
கொட்டுக்காளி’ உண்மைக்கு நெருக்கமான படம் : சூரி நெகிழ்ச்சி
Published on 08/07/2024 11:47
Entertainment

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள திரைப்படம் ‘கொட்டுக்காளி’.

அன்னா பென் நாயகியாக நடித்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 23ம் தேதி அன்று படம் திரைக்கு வருகிறது. இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் வென்றது.

சூரி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கொட்டுக்காளி படம் குறித்து பதிவிட்டுள்ளார் அதில், என்னுடைய முந்தைய படங்களான விடுதலை, கருடனிலிருந்து முற்றிலும் வேறுப்பட்ட திரைப்படமாக கொட்டுக்காளி இருக்கும்.

இது ஒரு மெயின் ஸ்டீரிம் கன்டென்ட் திரைப்படம். உண்மைக்கு மிக நெருக்கமான படம். இதில் வரும் என்னுடைய பாண்டி என்கிற கதாபாத்திரம் எல்லா குடும்பங்ளிலும் இருக்கும் ஒருவன் தான். இந்த சமூகம் சொல்லிக்கொடுத்த உறவு முறைகளையும், நம்பிக்கைகளையும் பெரிதும் நம்புகிற ஒரு கதாபாத்திரம் தான் பாண்டி. இந்த படத்தில் வரும் பயணத்தில், இந்த சமூகம் உருவாக்குன பாண்டிக்கும், பாண்டி என்கிற தனிப்பட்ட ஒருவனுக்கும் நடக்குற மன போராட்டத்த சரியா பிரதிபலிக்கனும்னு ரொம்ப கவனமா இருந்தேன். அதை சரியாவும் பண்ணி இருக்கேன்னு நம்புறேன். நீங்க அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படமாக கொட்டுக்காளி நிச்சயம் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Comments