Offline
Menu
டிக்டாக் பகடிவதை: மலேசியாவில் நாளும் 850 வீடியோக்கள் நீக்கம்!
Published on 08/14/2024 16:44
News

மலேசியாவில் ஒவ்வொரு நாளும் பகடிவதை சம்பந்தப்பட்ட சராசரி 850 டிக்டாக் வீடியோக்கள் நீக்கப்படுகின்றன.

இவ்வாண்டு முதல் மூன்று மாதங்களில் மட்டும் இது போன்ற 78 ஆயிரம் வீடியோக்கள் டிக்டாக் தளத்தில் இருந்து நீக்கப்பட்டன.

இது மிகப்பெரிய பாறையில் ஒரு சிறு துளிதான் என்று மன நல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பகடிவதைக்கு எதிராக டிக்டாக் நிர்வாகம் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

ஈஷா என்ற ராஜேஸ்வரி அப்பாவு தற்கொலை செய்து கொண்ட பின்னர் இந்த டிக்டாக் பகடி வதை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து. மலேசிய அரசாங்கத்தின் நிலைப்பாடு கடுமையாகியது.

 

Comments