Offline
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது மேலும் 2 புதிய கொலை வழக்கு
Published on 09/02/2024 00:49
News

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மேலும் 2 புதிய கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  வங்கதேசத்தில் பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்ததால் ஷேக் ஹசினா தனது பிரதமர் பதவியை கடந்த 5ம் தேதி ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவருக்கு எதிராக தற்போது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் போராட்டத்தில் தொடர்புடைய 3 பேர் கொலை தொடர்பாக முன்னாள் பிரதமர் ஹசீனா மற்றும் அவரது முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக மேலும் 2 கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. ஹசீனாவுக்கு எதிராக மொத்தம் 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 70 வழக்குகள் கொலை குற்றச்சாட்டுகளாகும். மேலும் மனித நேயம் மற்றும் இனப்படுகொலை குற்றங்கள் தொடர்பாக 8 வழக்குகளும், 3 கடத்தல் மற்றும் 3 பிற குற்றச்சாட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comments