Offline
மகளிருக்கான பிரத்தியேக ரயில் கோச்சுகளில் அத்து மீறும் ஆண்களே, ஜாக்கிரதை!
Published on 09/03/2024 05:10
News

கே.டி.எம். நிறுவனத்தின் மகளிருக்கான பிரத்தியேக ரயில் கோச்சுகளில் அத்து மீறி ஆடவர்கள் நுழைவதைத் தடுக்க சிறப்பு அதிகாரிகளும் உதவி காவல்துறையினரும் ரோந்துக் காவல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவர்.

மேலும் இதன் தொடர்பிலான செயற்பாடுகளை மேம்படுத்துவதன் தொடர்பில் தரை பொது போக்குவரத்து கழகத்துடன் கே.டி.எம். தொடர்ந்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறது என்று அறிக்கை வழி தெரிவித்து கொண்டது கே. டி. எம் .

சட்ட விதிகளை ஏற்படுத்துவது, தொடர் அமலாக்க நடவடிக்கைகள், விழிப்புணர்வு இயக்கங்களை நடத்துவது போன்ற பலதரப்பட்ட நடவடிக்கைகளை அந்தப் பேச்சுவார்த்தை உட்படுத்தி இருக்கிறது.

ஆடவர் எவரும் மகளிர் சிறப்பு கோச்சுக்களில் அத்துமீறி நுழைவதைத் தடுக்கும் நடவடிக்கையின் அடிப்படையில் சிறப்பு அதிகாரிகளையும் உதவி போலீசாரையும் ரோந்துக் காவலுக்கு ஈடுபடுத்தும் நடவடிக்கையிலும் அதீத கவனம் செலுத்தப்படும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

Comments