Offline
வீட்டில் ஏற்பட்ட தீ: படுக்கையறையில் இருந்து கிடந்த நபர்
Published on 09/06/2024 01:58
News

பட்டர்வொர்த், ஜாலான் அஸ்ம்ப்ஷனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் தனது வீட்டின் படுக்கையறையில் இறந்து கிடந்தார். வியாழன் (செப்டம்பர் 5) நள்ளிரவு 1.15 மணியளவில் 55 வயதுடைய நபர் கண்டுபிடிக்கப்பட்டதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அவரது மரணம் சம்பவ இடத்தில் இருந்த சுகாதார அமைச்சக அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில் படுக்கையறையில் தீ விபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது என்றார். தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

 

Comments