Offline
கமிஷனர் குமாருக்கு டத்தோ விருது
Published on 09/08/2024 01:40
News

ஜோகூர்:

மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் கடந்த ஜுன் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வ பிறந்தநாளை கொண்டாடினார்.

இதனை முன்னிட்டு இஸ்தானா நெகாரா பாலாய்ருங் ஸ்ரீயில் இன்று காலை நடைபெற்ற விருதளிப்பு நிகழ்ச்சியில் 116 உயர் விருதுகளை பெற்றனர்.

ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் எம். குமார் டத்தோ விருது பெற்றார்.

இதனிடையே மத்திய அரசாங்க விருதுக்கு 2,335 பேர் பரிந்துரைக்கப்பட்டதில் 116 மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர் என்று இஸ்தானா நெகாரா கிரேண்ட் சேம்பர்லின் டத்தோ அஸுவான் எஃபெண்டி ஸைராகித்நய்னி தெரிவித்தார்.

 

Comments