Offline
குழந்தையின் சடலத்தை புதைத்து சிமெண்டு போட்டு மூடிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on 09/09/2024 19:39
News

கோலாலம்பூர்:

கைக் குழந்தையின் சடலத்தை ஒரு வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் புதைத்து சிமெண்டு போட்டு மூடியவர் என்று சந்தேகிக்கப்படும் இந்தோனேசியப் பெண்ணை கைது செய்வதற்கு பேராக் மாநில போலீஸ் இன்டர்போல் எனப்படும் அனைத்துலக போலீஸ் உதவியை நாடும் என்று அதன் தலைவர் டத்தோ அஸிஸி மாட் அரிஸ் கூறினார்.

ஈப்போ, தாமான் ஸ்ரீ ரோக்காமில் கடந்த ஆகஸ்டு 28 ஆம் தேதி இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது என்று அவர் சொன்னார்.

தேடப்படும் இந்தோனேசியப் பெண் தான் அந்த வீட்டில் ஆகக் கடைசியாக வாடகைக்கு இருந்தவர். அவரை தேடும் பணி தொடர்கிறது என்று அஸிஸி தெரிவித்தார்.

அந்தப் பெண் இன்னமும் மலேசியாவில் தான் இருக்கிறாரா அல்லது இந்தோனேசியாவுக்கு தப்பி ஓடிவிட்டாரா என்பது உறுதியாக தெரியவில்லை எனவும் அவர் சொன்னார்.

Comments