Offline
Menu
பலாத்காரம் செய்ய முயன்ற மருத்துவர்.. அந்தரங்க உறுப்பை வெட்டிய நர்ஸ்
Published on 09/14/2024 07:16
News

பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்த கங்காபூரில் ஆர்பிஎஸ் ஹெல்த் கேர் சென்டர் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. முஸ்ரிகராரி காவல் நிலைய வட்டத்திற்குள் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அரங்கேறிய கூட்டு பாலியல் வன்புறவு முயற்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற சம்பவத்தின் போது மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியரை மருத்துவர் குமார், மற்றும் அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த சுனில் குமார் குப்தா மற்றும் அவதேஷ் குமார் ஆகியோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க செவிலியர் தன் கையில் கிடைத்த பிளேடு கொண்டு மருத்துவர் குமாரின் ஆணுறுப்பை அறுத்துள்ளார்.

இதையடுத்து, மூவரிடம் இருந்து தப்பிய செவிலியர் மருத்துவமனையில் மறைந்திருந்து காவல் நிலையத்திற்கு அழைப்பு விடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மருத்துவமனையில் இருந்த மருத்துவர் மற்றும் இருவரை கைது செய்தனர். விசாரணையில் மருத்துவர் உள்பட மூவரும் மதுபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.

“ஆபத்தான காலக்கட்டத்தில் செவிலியரின் செயல்பாடு மிகவும் பாராட்டுக்குரியது,” என காவல் துறை துணை கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் பாண்டே தெரிவித்தார்.

Comments