Offline
தளபதி 69 படத்தின் அறிவிப்பு… மாஸ் அப்டேட் விட்ட தயாரிப்பு நிறுவனம்
Published on 09/15/2024 03:12
News

விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படமே விஜய் நடிக்கும் கடைசி படம் என அவர் அறிவித்து இருந்தார். அதற்கடுத்து முழுவதும் அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார்.

தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை உறுதி படுத்தும் வகையில் எச். வினோத் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருவதாகவும் சென்னையில் ஆபிஸ் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை சமீபத்தில் எச்.வினோத் ஒரு விருது வழங்கும் விழாவில் கூறினார்.

மேலும் இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார். இசையை அனிருத் மேற் கொள்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவை மேற் கொள்கிறார். படத்தின் படத்தொகுப்பாளராக பிரதீப் இ ராகவ் பணியாற்றவுள்ளார் என தகவல்கள் வெளியாகின.

கே.வி. என் தயாரிப்பு நிறுவனம் தற்பொழுது அவர்கள் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படம் என விஜய் படத்தில் உல்ல கிளிம்ப்ஸ் காட்சிகளை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளனர். தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Comments