Offline
இரட்டை மாடி கடை வீட்டில் ஏற்பட்ட தீயில் ஆடவர் காயம்
Published on 09/15/2024 15:25
News

ஜெஞ்சாரோம் அருகே உள்ள தாமான் ரம்பாய் இண்டாவில் உள்ள இரண்டு மாடி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 வயது நபர் காயமடைந்தார். சனிக்கிழமை (செப்டம்பர் 14) அதிகாலை 5.15 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

பந்திங் மற்றும் தெலுக் பாங்லிமா காராங் நிலையங்களில் இருந்து 12 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) ஒரு அறிக்கையில், கடை 70%  தீயில் நாசமானது. ஆனால் காயமடைந்த நபரை நாங்கள் காப்பாற்ற முடிந்தது என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

 

Comments