Offline
Menu
வீட்டின் மீது விழுந்த மரம் – ஆடவருக்கு பலத்த காயம்
Published on 09/18/2024 00:22
News

சுங்கைப்பட்டாணி புக்கிட் செலம்பாவ், கம்போங் நியோரில் இன்று அதிகாலை மரம் விழுந்ததில் 34 வயது நபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அமான் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைமை உதவி கண்காணிப்பாளர் தீயணைப்புத் தலைவர் அஹாஹரி அப்துல்லா கூறுகையில், அதிகாலை 1.18 மணிக்கு நிலையத்திற்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்தததை தொடர்ந்து  குழு அதிகாலை 1.44 மணிக்கு அங்கு சென்றடைந்தது.

அங்கு சென்றபோது, ​ B வகுப்பின் வீட்டின் மீது மரம் விழுந்ததைக் (பாதி கான்கிரீட், பாதி மரத்தால் ஆன வீடு) கண்டனர். மரம் விழுந்த தாக்கத்தில் 34 வயது நபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டவரை வீட்டிலிருந்து வெளியேற்றினர். அதைத் தொடர்ந்து அவருக்கு சம்பவ இடத்தில் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு (HSAH) அனுப்பப்பட்டார். விழுந்த மரங்களை அகற்றும் பணி உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது என்றார்.

 

Comments