Offline
28 மாணவிகள் கை, கால்களை கட்டிப்போட்டு பலாத்காரம்- விடுதி நிர்வாகி மனைவியுடன் கைது
Published on 09/20/2024 01:35
News

ஆந்திர மாநிலம் ஏலூரில் தனியார் மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. எர்ரகுண்ட பள்ளியை சேர்ந்த சசிகுமார் (வயது 52) என்பவர் இந்த விடுதியை நிர்வகித்து வருகிறார். இவருடைய 2-வது மனைவி பனி ஸ்ரீ விடுதி வாடன் ஆகவும் மருமகள் பாதுகாவலராகவும் உள்ளனர்.

இந்த விடுதியில் 3-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும் 45 மாணவிகள் தங்கி இருந்தனர். சசிகுமார் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார்.அவ்வப்போது இரவில் விடுதிக்கு வரும் அவர் மாணவிகள் அறைகள் அருகே நின்று புகைபிடித்தபடி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இதை மாணவிகள் வெளியே சொல்லாமல் அச்சத்தில் இருந்தனர். கடந்த 15-ந் தேதி அங்குள்ள 3 சிறுமிகளிடம் உங்களை அழகாக போட்டோ எடுக்கிறேன் என்னுடன் வாருங்கள் என வற்புறுத்தி சசிகுமார் காரில் அழைத்துச் சென்றார்.ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு சிறுமிகளின் கை, கால்களை கட்டி போட்டு விடிய விடிய பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மறுநாள் காலையில் அந்த சிறுமிகளை விடுதியில் கொண்டு விட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் நாட்களாக கடும் மன உளைச்சலுடன் இருந்தனர். இது தொடர்பாக 2-வது நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன்பேரில் ஏலூர் டி.எஸ்.பி. சரவணன் குமார் மற்றும் போலீசார் தங்கும் விடுதிக்கு சென்று ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர்.

மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரித்தனர். அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்து யார் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.விடுதியில் தங்கி இருந்த சிறுமிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை பலரை காரில் அழைத்துச் சென்று கை கால்களை கட்டி சசிகுமார் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. அவருடைய மிரட்டலுக்கு பயந்து வெளியே சொல்லாமல் அவர்கள் இருந்துள்ளனர்.

இது தொடர்பாக போக்சோ பிரிவுகளின் கீழ் சசிகுமார் அவருடைய மனைவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.சசிகுமார் மாணவிகள் விடுதியை அனுமதி இல்லாமல் நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. அவர் மீது அங்குள்ள 4 மாணவிகள் தனித்தனியாக புகார் அளித்தனர்.

கடந்த 4 மாதங்களில் மொத்தம் 28 மாணவிகளை கை, கால்களை கட்டி பலாத்காரம் செய்துள்ளார். அங்குள்ள கண்காணிப்பு கேமரா உள்ள அறை பூட்டப்பட்டுள்ளது. அதனை திறந்து கேமரா காட்சிகளை ஆய்வு செய்தால் மேலும் பல தகவல்கள் வெளியே வரும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

Comments