Offline
விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லோரி: விரட்டி மடக்கிய நவ்யா நாயர்
Published on 09/20/2024 01:38
News

கேரள மாநிலம் பட்டணங்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷன். இவர், இரு தினங்களுக்கு முன் அந்தப் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்தியன் காபி ஹவுஸ் அருகே சென்ற போது, அவர் மீது மோதிவிட்டு, ஹரியானா பதிவு எண் கொண்ட லோரி ஒன்று நிற்காமல் சென்றது.

இதை, அந்த வழியாக காரில் சென்ற நடிகை நவ்யா நாயர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்த அவர், லாரியை விரட்டிச் சென்று மடக்கினார். போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த ரமேஷனை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற லோரியை மடக்கிப்பிடித்த நவ்யா நாயரை போலீஸாரும் பொதுமக்களும் பாராட்டியுள்ளன

Comments