Offline
Menu
செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
Published on 09/21/2024 04:39
News

கோலாலம்பூர்:

பருவமழை மாற்றம் காரணமாக செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதத் தொடக்கம் வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

மே 17-ஆம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது என்றும், இதனால் நாட்டின் பல பகுதிகளில் பலவீனமான காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று, மலேசியா வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் கூறினார்.

இந்த சூழ்நிலையானது இடியுடன் கூடிய மழை மற்றும் குறுகிய காலத்தில் பலத்த காற்று போன்ற வானிலையை உருவாக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

Comments