அலோர் ஸ்டார்:
கெடாவில் இன்று மதியம் 1.45 மணி நிலவரப்படி, 6,575 பேராக இருந்த பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று மாலை 6 மணி நிலவரப்படி 2,115 குடும்பங்களைச் சேர்ந்த 6,718 பேராக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் தங்குவதற்கு அம்மாநிலம் முழுவதும் உள்ள ஏழு மாவட்டங்களில் திறக்கப்பட்ட 40 நிவாரண மையங்கள் செயற்பாட்டிலுள்ளதாக சமூக நலப் பேரிடர் தகவல் துறை (JKM) தெரிவித்துள்ளது.