கோலாலம்பூர்:
நேற்று முதல் தொடங்கிவிட்ட பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பேரளவிலான வெள்ளப் பிரச்சினைகளை எதிர்கொள்ள சிலாங்கூர் மாநில வெள்ளப் பேரிடர் நிர்வாக பிரிவு தயார்நிலையில் இருப்பதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டில் நேரிட்ட வெள்ளப் பேரிடரின் போது நிவாரண மையங்களாக செற்பட பதிவுப் பெற்ற அனைத்து நிவாரண மையங்களும் இனி வரும் வெள்ள காலகட்டத்திற்காக மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.
வெள்ளம் ஏற்படக் கூடிய பகுதிகளில் நீர்ப் போக்குவரத்து முறைகளும் சீர் செய்யப்படும். கனமழை பெய்யும் காலகட்டங்களில் அதிகமான நீர்வரத்தைச் சமாளிக்கத் தக்கதாக நீரோட்ட முறைகள் மேம்படுத்தப்படும் என்றார் அவர்.